முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
இது தொடர்பாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளில் நாட்டு மக்களுடன் இணைந்து நானும் அவரை நினைவு கூர்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.