சமாஜ்வாதி கட்சித் தலைவராக முலாயம் சிங் யாதவ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் தேசியத் தலைவராக அவர் 9-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் தேசிய அளவிளான அலுவல் கூட்டம் தொடங்கியது. முதல் நாளான இன்று, சமாஜ்வாதி கட்சித் தலைவராக முலாயம் சிங் யாதவ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
அவர் அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு கட்சித் தலைவராக இருப்பார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.