இந்தியா

நேபாள பிரதமராக பதவியேற்றார் ஷேர் பகதூர் தியூபா

பிடிஐ

நேபாள நாட்டின் புதிய பிரதமராக ஷேர் பகதூர் தியூபா (70) இன்று பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு அந்நாட்டு அதிபர் வித்யா தேவி பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நேபாளத்தில் நேபாள கம்யூனிஸ்ட், நேபாள காங்கிரஸ், மாதேஸி கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சியை பகிர்ந்து கொள்ள கூட்டணி கட்சிகள் ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி 9 மாதங்கள் பிரதமராக இருந்த நேபாள கம்யூனிஸ்ட் தலைவர் பிரசண்டா, கடந்த 24-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து நேபாள காங்கிரஸ் மூத்த தலைவர் ஷேர் பகதூர் தியூபா (70) புதிய பிரதமராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு 3 முறை பிரதமராக பதவி வகித்துள்ளார்.

SCROLL FOR NEXT