உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுவது, இஸ்ரேலிடம் இருந்து 8 ஆயிரம் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், 12 ஆளில்லா உளவு விமானம் வாங்குதல் ஆகியவற்றுக்காக ரூ.80 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் நேற்று ராணுவ தளவாட கொள்முதல் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ரூ.80 ஆயிரம் கோடி ஒதுக் கப்பட்டது. இதில் 6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுவதற்கு மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிடம் இருந்து 8,356 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும், அவற்றுக்காக 321 ஏவுதள அமைப்புகளை வாங்க ரூ.3,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்காவிடம் இருந்து இந்த ரக ஏவுகணைகளை வாங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இப்போது அந்த முடிவு மாற்றப்பட்டு இஸ்ரேலிடம் இருந்து வாங்க இறுதி செய்யப்பட்டுள்ளது.
12 ஆளில்லாத உளவு விமானங் களை வாங்க ரூ.1,850 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர சிறிய ரக போர் வாகனங்கள் உள் ளிட்டவையும் வாங்கப்படவுள்ளன.
உள்நாட்டிலேயே நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.