உயர் நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி லீலா சேத் (86) டெல்லியில் நேற்று காலமானார்.
கடந்த 1930-ல் லக்னோவில் பிறந்த அவர் சட்டம் பயின்றார். வழக்கறிஞராக பணியை தொடங்கிய அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்றார்.
கடந்த 1991-ல் அதே உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையைப் பெற்றார். உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் நேற்று அவர் காலமானார்.