ஆந்திராவை வெளிநாடுகளிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு அடகு வைப்பதாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ரோஜா குற்றம் சாட்டியுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடிகையும், நகரி தொகுதி எம்எல்ஏ.வுமான ரோஜா செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தலைநகர் அமராவதியை நிர்மாணிக்கும் போர்வையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறார். ‘ஸ்விஸ் சேலஞ்ச்’ என்ற பெயரில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் உரிமையை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தும். ஆங்கிலேயரை வெளியேற்றி நாம் சுதந்திரம் பெற்றோம். ஆனால் தற்போது ஆந்திராவில் வெளிநாட்டவர்களை வியாபாரம் என்னும் பெயரில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் கொண்டு வந்து நம்மை அடகு வைக்கிறார். ‘மேக் இன் இந்தியா’ என்பது ஆந்திராவைப் பொறுத்தவரை ‘டேக் இன் இந்தியா’ ஆகிவிட்டது. தெலுங்கு தேசம் கட்சி என்பது திருடர்களின் இருப்பிடமாகி விட்டது. ஆந்திர அமைச்சர்கள் முதல்வரின் தலையாட்டும் பொம்மையாக உள்ளனர்.
இவ்வாறு ரோஜா கூறினார்.