இந்தியா

பிரேசில் விமான கொள்முதல் ஊழல் புகார்: முதல்கட்ட விசாரணையை தொடங்கியது சிபிஐ

பிடிஐ

பிரேசில் நிறுவனத்திடமிருந்து விமானம் வாங்கியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பான ஆதாரங்களை திரட்டுவதற்காக, முதல்கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கி உள்ளது.

இதுகுறித்து சிபிஐ வட்டாரத் தினர் கூறும்போது, “பிரேசிலின் எம்பரர் நிறுவனத்திடமிருந்து விமானங்களை வாங்கியது தொடர் பான புகார் குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளோம்” என்றனர்.

எந்த ஒரு முறைகேடு புகார் குறித்தும் போதுமான ஆதாரம் கிடைத்தால், சிபிஐ அமைப்பானது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை தொடங் கும். இல்லாவிட்டால் போதுமான ஆதாரங்களை திரட்ட முதற்கட்ட விசாரணை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்ட விசாரணையின் போது, யாருடைய வாக்குமூலத் தையும் பதிவு செய்யவோ, அவர்களுக்கு சொந்தமான இடங் களில் சோதனை நடத்தவோ முடியாது. கடந்த 2008-ம் ஆண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) ரூ.1,400 கோடி மதிப்பில் நவீன ராடார்கள் பொருத்தப்பட்ட 3 ராணுவ கண்காணிப்பு விமானங் களை வாங்க பிரேசில் நாட்டின் எம்பரர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில், இந்தியா, சவுதி அரேபியா அரசுகளிடமிருந்து விமான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக எம்பரர் நிறுவனம், இடைத்தரகர் மூலம் லஞ்சம் வழங்கியதாக பிரேசில் நாளிதழில் செய்தி வெளியானது.

இந்தப் புகார் மிகவும் முக்கிய மான விவகாரம் என்பதால் இது பற்றி விசாரணை நடத்துமாறு சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவை பாது காப்பு அமைச்சகம் கேட்டுக் கொண் டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT