இந்தியா

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்: சிகிச்சையின்றி 16 நோயாளிகள் உயிரிழப்பு - லக்னோ மருத்துவமனையில் சோகம்

ஐஏஎன்எஸ்

லக்னோ மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலைநிறுத்தத் தில் ஈடுபட்டதால், 16 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ மனை இயங்கிவருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் இளநிலை உறை விட மருத்துவர்கள், தங்களின் முது நிலை மருத்துவப் படிப்பு சேர்க்கை ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எம்டி/எம்எஸ் மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பித்தோ ருக்கு, நுழைவுத்தேர்வு மூலம், தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு, கடந்த ஏப்ரல் மாதம் சேர்க்கை நடைபெற்றது. முதுநிலைப் படிப்பு களில் சேர்ந்தவர்கள் மருத்துவ மனையில் இளநிலை உறைவிட மருத்துவர்களாக மே 1-ம் தேதி முதல் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், முதுநிலை படிப்பு களுக்கான சேர்க்கையின் போது, கிராமப்புறங்களில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு 30 சதவீதம் கூடுதல் மதிப்பெண் வழங்கவேண் டும் என, கடந்த மே 12-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்படி, ஏற்கெனவே நடந்து முடிந்த சேர்க்கையை ரத்துசெய்த மாநில அரசு, புதிதாக தரவரிசைப் பட்டியலை வெளியிட முடிவெடுத் துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட 300-க்கும் அதிகமான இளநிலை மருத்துவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர். தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுஆய்வு மனுக் களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருவதால் இறுதித்தீர்ப்பு வெளி யாகும் வரை, மாநில அரசு பொறுத் திருக்க வேண்டும் என, மருத்துவர் கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு துணையாக, எம்பிபிஎஸ் பட்டதாரிகளும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் ஏற்பட்ட மருத்துவர்கள் பற்றாக்குறையால், மருத்துவமனை செயல்பாடு முடங்கியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஏராளமான நோயாளிகள் வெளியேறி வருகின்றனர்.

மேலும், 12-க்கும் அதிகமான அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட் டுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை மட்டும், ஒருசில மூத்த மருத்துவர்கள் கவனிக்கின்றனர். எனினும், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், 16 நோயாளிகள் இறந்துவிட்டதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவர்கள் மனிதாபிமான அடிப்படையில், தங்களின் போராட் டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பவேண்டும் என, ஆளுநர் ராம்நாயக் வேண்டுகோள் விடுத் துள்ளார்.

SCROLL FOR NEXT