இந்தியா

காமன்வெல்த் புறக்கணிப்பு ஏன்?- விளக்குகிறார் பிரதமர்

செய்திப்பிரிவு

நவம்பர் 15- ஆம் தேதியன்று, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காததன் காரணம் குறித்து அந்நாட்டு அதிபர் ராஜபக்‌ஷேவிடம், பிரதமர் மன்மோகன் சிங் இன்று தொலைபேசி மூலம் விளக்கமளிப்பார் எனத் தெரிகிறது.

முன்னதாக, தமிழகத்தின் அழுத்தம் எதிரொலியாக இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்தார்.

அதே நேரத்தில், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான இந்தியக் குழு கொழும்புவுக்குச் செல்வது என முடிவெடுக்கப்பட்டது.

பிரதமர் எழுதிய கடிதம்:

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து, இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கையில் இம்மாதம் 15-ம் தேதி தொடங்கும் காமன்வெல்த் மாநாட்டில் தன்னால் பங்கேற்க முடியாதது தொடர்பாக, சிறு குறிப்பு மட்டுமே கொண்ட அந்தக் கடிதம், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் அதிபர் ராஜபக்‌ஷேவிடம் அளிக்கப்பட்டது.

அதேவேளையில், தம்மால் பயங்கேற்க முடியாதக் காரணத்தை அந்தக் கடிதத்தில் பிரதமர் குறிப்பிடவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் தனக்குப் பதிலாக இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பார் என்ற தகவலையும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

சல்மான் குர்ஷித் கருத்து:

இதனிடையே, காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காததால், இலங்கை உடனான உறவு பாதிக்காது என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT