இந்தியா

அருணாச்சலில் பாஜகவில் சேர்ந்த 23 காங். கவுன்சிலர்கள்

செய்திப்பிரிவு

அருணாச்சலபிரதேச தலைநகர் இடாநகர் மாநகராட்சி மொத்தம் 30 உறுப்பினர்களைக் கொண்டதாகும். இவர்களில் 26 பேர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் எண்ணிக்கை 25 ஆக இருந்தது. இவர்களில் 23 பேர் காங்கிரஸை விட்டு விலகி, மாநில முதல்வர் பெமா காண்டு, மாநில பாஜக தலைவர் தபீர் காவோ முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

இதற்கான விழா இடாநகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி தலைவர் கிபா ககு, துணைத் தலைவர் தார் நசுங் தலைமையில் 20 உறுப்பினர்கள் பங்கேற்றனர். 3 பேர், தாங்கள் பாஜகவில் இணைவதாகவும் ஆனால் குறிப்பிட்ட காரணங்களால் விழாவில் பங்கேற்க முடியவில்லை எனவும் கடிதம் அளித்துள்ளனர்.

SCROLL FOR NEXT