டெல்லி காவல் துறையினரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தான் ஏற்கெனவே தெரிவித்திருந்தது போல் இன்று துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை நேரில் சந்தித்து காவல் துறையினர் குறித்து முறையிட்டார்.
தெற்கு டெல்லியில் காவல் துறையினரின் ஒத்துழைப்புடன் பாலியல் தொழில் நடைபெறுவதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ராக்கி பிர்லா கோரிக்கையை போலீசார் நிராகரித்தது, இதேபோல், மாமியார் வீட்டாரால் இளம் பெண் ஒருவர் எரிர்த்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய அமைச்சர் சோம்நாத் பாரதியின் கோரிக்கை அசட்டை செய்யப்பட்டது என இரண்டு புகார்களை கேஜ்ரிவால் துணை நிலை ஆளுநரிடம் தெரிவித்தார்.
சந்திப்பின் போது அமைச்சர்கள், சோம்நாத் பாரதி, ராக்கி பிர்லா, டெல்லி போலீஸ் கமிஷனர் மற்றும் புகாருக்குள்ளான காவலர்கள் இருவரும் இருந்தனர்.