இந்தியா

உத்தராகண்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்: வானிலை மையம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

உத்தராகண்டில் அடுத்த 2 நாட்க ளுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தின் பிதோரகர், சமோலி மாவட்டங் களில் நேற்றுமுன்தினம் மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டியது. இதில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கோஸி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர பகுதி களில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நைனிடாலில் நிலச்சரிவுகளால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப் பட்டுள்ளது. கங்கோத்ரி நெடுஞ்சாலையில் 50 மீட்டர் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பல கிராமங்கள், நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மலைப்பகுதி கிராமங்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதி களில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ராணுவ வீரர்களும் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

6000 பேர் பலி

இந்நிலையில் டேராடூன், நைனிடால், ஹரித்வார் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அந்த மாநில வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உத்தராகண்டில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கனமழை காரணமாக 6000 பேர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT