இந்தியா

டெல்லியில் தெலங்கானா ஆதரவாளர்கள் - எதிர்ப்பாளர்கள் மோதல்

செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலம் அமைக்க ஆதரவு தெரிவிப்பவர்களும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் இன்று டெல்லி ஆந்திர பவன் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினரும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. போலீசார் குறுக்கிட்டு மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். திடீர் மோதலால் ஆந்திர பவன் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கிரண்குமார் தர்ணா:

இதற்கிடையில், ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி சீமாந்திரா பகுதி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

SCROLL FOR NEXT