இந்தியா

தெலங்கானா : அக். 11-ல் அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டம்

செய்திப்பிரிவு

தெலங்கானா தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே தலைமையில் வரும் வெள்ளிக் கிழமை (11ம் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக கடந்த செவ்வாய் கிழமை 10 பேர் கொண்ட மத்திய அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் இருந்து தெலங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த பல்லம் ராஜூ நீக்கப்பட்டார். ஏ.கே.அந்தோனி, குலாம் நபி ஆசாத், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் புதிதாக சேர்க்கபட்டுள்ளனர்.

இந்த குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10ல் இருந்து 7ஆக குறைக்கப்பட்டுள்ளது.அமைச்சர்கள் குழுவுக்கு சிறப்பு அழைப்பாளராக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி சேர்க்கப்பட்டுள்ளார்.

பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், தெலங்கானா தொடர்பாக அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டம் நடைபெற இருக்கிறது.

SCROLL FOR NEXT