இந்தியா

ஹைதராபாத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி

செய்திப்பிரிவு

ஹைதராபாத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து நகரம் முழுவதும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக வலைதளம் மூலம் இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு சிரியாவுக்குச் சென்று பயிற்சி பெற்றிருப்பதாகவும், அவர்கள் மீண்டும் ஹைதராபாத்துக்கு திரும்பி வந்து நாச வேலைகளில் ஈடுபட சதித் திட்டம் தீட்டி வருவதாகவும் மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT