மத்திய அரசின் மின் திட்டங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என்று மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் எச்சரிக்கை விடுத் துள்ளார்.
மாநில மின்துறை அமைச்சர் களின் மாநாடு கோவா மாநிலம் பனாஜியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:
கிராமப்புற மின் விநியோகம், நகர்ப்புற மின் மேம்பாடு ஆகிய வற்றை கருத்தில் கொண்டு தீன் தயாள் உபாத்யாயா கிராம ஜோதி யோஜ்னா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல் படுத்தி வருகிறது. இந்தத் திட்டங் களுக்காக பொருட் களை கொள் முதல் செய்யும்போது எவ்வித ஊழலும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஒருவேளை மத்திய மின் திட் டங்களில் முறை கேடுகள் நடை பெற்றிருப்பது கண்டறி யப்பட்டால் சம்பந்தப்பட்ட மாநிலங்க ளுக்கான நிதியுதவி நிறுத்தப்படும்.
இதற்காக மத்திய மின் திட்டங்களுக்காக வாங்கப்பட்ட பொருட்களின் தரத்தை நாங்கள் ஆய்வு செய்து மதிப்பிடுவோம். மேலும் பொருட்கள் வாங்கும் போது வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்க வேண்டும் தரத்திலோ, தொழில் நுட்பத்திலோ, விலையிலோ ஏதாவது முறை கேடுகள் நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவை குறித்து மத்திய மின்துறை இணைய தளத்தில் வெளியிடப்படும்.
பல்வேறு மாநிலங்களில் மின் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொதுவாக ஏழைகள் மின்சாரத்தை திருடுவது இல்லை. மிகப்பெரிய நிறுவனங்கள், வசதி படைத்தவர்கள்தான் மின்சாரத்தை திருடுகின்றனர்.
டெல்லியில் மட்டும் மின் திருட்டால் ஆண்டுக்கு ரூ.1300 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதே போல உத்தரப் பிரதேசம், ஜார்க் கண்ட் மாநிலங்களில் மின் திருட்டு அதிகமாக உள்ளது. எனவே நாடு முழுவதும் மின் திருட்டை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.