இந்தியா

ஊழலற்ற ஆட்சிக்கு கிடைத்த வெற்றி: அமித் ஷா பெருமிதம்

பிடிஐ

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்துள்ள வெற்றி ஊழலற்ற ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்துள்ள வெற்றி ஊழலற்ற ஆட்சிக்கும் மோடியின் ஏழைகள் நலன் சாந்த திட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி. பாஜக மீது நம்பிக்கை வைத்த உத்தரப் பிரதேச மக்களுக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்று வெற்றி:

உத்தரப் பிரதேச தேர்தல் வரலாற்றில் 300 தொகுதிகளுக்கு மேல் ஒரு கட்சி வெற்றி பெறுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1991-ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 221 தொகுதிகளில் வெற்றி பெற்றதே அதிகபட்ச தொகுதிகளை ஒரு கட்சி கைப்பற்றியதாக இருந்தது.

SCROLL FOR NEXT