இந்தியா

டெல்லியில் இன்று காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம்

செய்திப்பிரிவு

மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலர் தலைமையில், டெல்லியில் இன்று காவிரி கண்காணிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்று நடைபெறும் இக்கூட்டத்தில், தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

அரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டு 8 மாதங்கள் ஆகிவிட்டன. இருப்பினும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது போல் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை அமைப்பு ஆகியவை இன்னும் அமைக்கப்படவில்லை.

எனவே, இன்றைய கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT