இந்தியா

மும்பை அடுக்கு மாடி குடியிருப்பில் தீ: 4 பேர் பலி

செய்திப்பிரிவு

மும்பை விக்ரோலி பகுதியில் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

இன்று அதிகாலையில், விக்ரோலி சித்தார்த்தாநகர் பகுதியில் இருக்கும் 7 மாடிகள் கொண்ட கட்டடத்தில் திடீரென தீ பிடித்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

தீ விபத்து ஏற்பட்ட அதிகாலை நேரத்தில், அந்த குடியிருப்புவாசிகள் அயர்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர். மேலும், கட்டத்தில் அவசர வழியும் இல்லை எனத் தெரிகிறது.

இதனால், 4 பேர் தீயில் கருகி பலியாகினர். 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT