இந்தியா

காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடகாவில் 15-ம் தேதி ரயில் மறியல் போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

இரா.வினோத்

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப் பட்டதை கண்டித்து கர்நாடகாவில் நேற்று 6-வது நாளாக கன்னட அமைப்பினரும், விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வரும் 15-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண் டித்து மண்டியா, மைசூரு, பெங்க ளூரு உள்ளிட்ட பகுதிகளில் விவ சாயிகளும், கன்னட அமைப்பி னரும் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் கர்நாடகாவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.

இந்நிலையில் 6-வது நாளாக நேற்றும் மண்டியா, ராம்நகர், சாம்ராஜ் நகர், மைசூரு, குடகு, கொப்பல் உள்ளிட்ட‌ இடங்களில் பல்வேறு கன்னட அமைப்பினரும், விவசாய சங்கங்களும் தமிழகத்தை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டன. மைசூரு- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு விவசாய சங்கத்தினர் சாலையில் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து முடங்கியது.

மேலும் விவசாயிகள் சார்பில் சாலை மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது த‌மிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை கண்டிக்கும் வகையில் அவர்களது உருவ பொம்மைகளை தீயிட்டு எரித்தனர். இதைத்தொடார்ந்து நஞ்சன்கூடு சாலையில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் நூற் றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவி கள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

தற்கொலை முயற்சி

மண்டியா மாவட்டம் பாண்டவப்புரா அருகே நடந்த போராட்டத்தின்போது ரவி (47), சந்துரு (49), சுப்ரமணி (57) ஆகிய மூன்று விவசாயிகள் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டு காப்பாற்றினர். விவசாயிகள் தொடர்ந்து காவிரி ஆற்றில் இறங்கி போராடுவதை தடுக்கும் வகையில் மைசூரு, மண்டியா ஆகிய மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய உள்ளிட்ட முக்கிய அணைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

700 அமைப்புகள் ஆதரவு

இந்நிலையில் கன்னட சலுவளிக் கட்சியின் தலைவரும், கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ், ‘‘தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து வரும் 15-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இதற்கு ஆதரவு தெரிவித்து 700-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் பங்கேற்கும்’’ என அறிவித்தார்.

கர்நாடகா நாளை மேல்முறையீடு

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தரா மையா பெங்களூரில் நேற்று அமைச்சரவையின் அவசர கூட்டத் தை கூட்டினார். நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் நீர்வளத் துறை அமைச்சர் பாட்டீல் டெல்லி சென்று கர்நாடக அரசு வழக்கறிஞர் பாலி எஸ். நாரிமனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

தேவகவுடா - மோடி சந்திப்பு

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன் னாள் பிரதமருமான தேவகவுடா நேற்று முன்தினம் இரவு பிர தமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். காவிரி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தேவகவுடாவின் கோரிக்கையை ஏற்க முடியாத நிலையை மோடி சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT