நடிகரும், எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா, சாலை விபத்தில் சிக்கி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
ஆந்திர மாநிலம், ஹிந்துபூர் தொகுதி சட்டப்பேரவை உறுப் பினரும், என்.டி.ராமாராவின் மகனுமான நடிகர் பாலகிருஷ்ணா நேற்று காரில் ஹிந்துபூரிலிருந்து பெங்களூரு சென்று கொண்டி ருந்தார்.
அப்போது கர்நாடக மாநிலம், பாகேஹல்லி எனும் இடத்தில் காரின் டயர் பஞ்சர் ஆகி நிலை தடுமாறி ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளா னது.
காரில் பயணம் செய்த பாலகிருஷ்ணா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். உடனடியாக மாற்று காரில் பாலகிருஷ்ணா பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.