இந்தியா

விவாதத்துக்கு தயாரா?- ஷீலா தீட்ஷித்துக்கு அர்விந்த் கெஜ்ரிவால் சவால்

செய்திப்பிரிவு

பொது இடத்தில் விவாதத்துக்கு தயாரா என டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்துக்கு, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில், மக்கள் முன்னிலையில் பொது இடத்தில் விவாதத்துக்கு வருமாறு ஷீலா தீட்ஷித்துக்கு, அர்விந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

ஏற்கெனவே இது போன்று ஒரு முறை அர்விந்த் கெஜ்ரிவால், ஷீலா தீட்ஷித்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதனை ஷீலா தீட்ஷித் ஏற்றுக்கொள்ளவில்லை.

இம்முறை ஷீலா தீட்ஷித்துக்கு கடிதம் மூலம்,பொது இடத்தில் விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் கெஜ்ரிவால். டெல்லி தேர்தலுக்கு பா.ஜ.க. வேட்பாளரை அறிவித்து விட்டதால் தேவைப்பட்டால் பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷவர்த்தன்-னையும் விவாதத்துக்கு அழைத்துக் கொள்ளலாம் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT