சுதந்திர தின உரையில் எந்தெந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என்பதை இணையதளம் மூலம் பொதுமக்களிடம் பிரதமர் மோடி யோசனை கேட்டுள்ளார்.
'மான் கி பாத்' (மனதின் குரல்) தலைப்பில் மாதந்தோறும் வானொலியில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்துகிறார். இந்த மாதத்தில் இன்று உரை நிகழ்த்திய மோடி இணையதளம் மூலம் மக்களுடன் கொண்டுள்ள தொடர்பு குறித்து பேசியது:
">mygov.in என்ற இணையதளம் கடந்த ஆண்டு இதே நாளில் தொடங்கப்பட்டது. இந்த ஓராண்டில் 2 கோடி யோசனைகளை பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அந்த யோசனைகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
வரும் சுதந்திர உரையில் எந்தெந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என்பதை அந்த இணையதளத்தில் பொதுமக்கள் யோசனை தெரிவிக்கலாம்.
சென்னையை சேர்ந்த ஒருவர், 'பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ' (பெண் குழந்தைகள் பாதுகாப்பு, 'ஸ்வாச் பாரத்' (தூய்மை இந்தியா), 'கிளீன் கங்கா' (தூய்மை கங்கை) ஆகிய பிரச்சினைகளை பேசுங்கள் என்று யோசனை தெரிவித்துள்ளார்" என்றார் பிரதமர் மோடி.