எனக்கு அதிகபட்ச பாதுகாப்பு தேவையில்லை, அது மற்றவர்களைச் சிரமப்படுத்தும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா காவல்துறையின் ஆண்டு விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:
எனக்கு எவ்விதப் பாதுகாப்பும் தேவையில்லை. அது எந்தவொரு வகையிலும் யாராவது ஒருவரைத் தொல்லைப்படுத்தும். அதை நான் விரும்பவில்லை. நான் பயணிக்கும் போதும் பாதுகாப்பு படையினர் அளிக்கும் பாதுகாப்பை விரும்புவதில்லை. அதனால், யாராவது பாதிக்கப்படுவர். நான் எளிமையாகவே பயணிக்க விரும்புகிறேன்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காவல்துறை முறையாகப் பேணி வருகிறது. என் அரசாங்கம் பொறுப்பேற்ற பின் 5 காவல்துறை ஆணையரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1.30 லட்சம் மக்கள்-காவல்துறை தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.