இந்தியா

மாநிலங்களவையில் லோக்பால் மசோதா தாக்கல்

செய்திப்பிரிவு

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே மாநிலங்களவையில் லோல்பால் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவைத் தாக்கல் செய்த மத்திய அமைச்சர் நாராயணசாமி, லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்துக் கட்சிகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.

எனினும், தெலங்கான பிரச்சினையில் கடும் அமளி நிலவியதால், லோக்பால் மசோதா பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

ஆந்திர மாநிலத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சமாஜ்வாதி மற்றும் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் கடுமையாக அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவை நடவடிக்கைகள் முடங்கும் வகையில் அமளி தொடர்ந்ததால், திங்கள்கிழமை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட லோக்பால் மசோதா மீது திங்கள்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இதனிடையே, லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி சமூக சேவகர் அன்னா ஹசாரே தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதம் 4-வது நாளாக இன்று தொடர்ந்தது.

இந்த மசோதாவுக்கு, பாஜக, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT