இந்தியா

விஷ வாயு கசிந்து 5 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்ததில் 5 தொழிலாளர்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்கு கோதாவரி மாவட்டம், மொகலத்தூர் மண்டலம், நல்லவாரி செருவு பகுதியில் ஆனந்த் அக்வா தண்ணீர் சுத்திகரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள நீர்தேக்க தொட்டியை 5 தொழிலாளர்கள் நேற்று சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அதிலிருந்து விஷ வாயு தாக்கியதில் 5 பேரும் மயங்கி விழுந்தனர். இவர்களை அங்கிருந்து மீட்டு, நரசாபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து நரசாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT