இந்தியா

குல்பூஷண் ஜாதவ் கருணை மனு

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் கருணை மனு அளித்திருப்பதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படையில் அதிகாரி யாக பணியாற்றி வந்த குல்பூஷண் ஜாதவ் விருப்ப ஓய்வு பெற்று ஈரானில் வர்த்தகம் செய்து வந்தார். அவரை இந்திய உளவாளி என்று குற்றம் சாட்டி பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.

கடந்த ஏப்ரலில் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவின் மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில் குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவித் பஜ்வாயிடம் கருணை மனு அளித்திருப்பதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக வெளி யிட்டுள்ள வீடியோவில், ‘என்னு டைய செயலால் அப்பாவிகளின் உயிர்கள் பலியாகி உள்ளன. என்னை மன்னித்து மரண தண் டனையை ரத்து செய்ய வேண்டும்’ என்று ஜாதவ் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT