பிளாக்பக் மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கான் மற்றும் இவருடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராவதிலிருந்து ஜோத்பூர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
மேலும் வழக்கு ஜனவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிபதி தல்பத் சிங் ராஜ்புரோஹித், சல்மான் கான், சயிப் அலி கான், தபு, நீலம், சோனாலி பெந்த்ரே ஆகியோரை கோர்ட்டிற்கு வருமாறு அழைப்பாணை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இவர்கள் தரப்பு வழக்கறிஞர் கே.கே.வியாஸ் கூறும்போது, “குற்றம்சாட்டப்பட்ட அனைவரின் சார்பாகவும் மனு செய்திருந்தோம், இதனையடுத்து நேரில் ஆஜரவாதிலிருந்து நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது” என்றார்.
குடியரசு தின நிகழ்ச்சி பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக நடிகர்கள் கோர்ட்டில் ஆஜராக வரும்போது போதுமான பாதுகாப்பு அளிப்பது கடினம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.