இந்தியா

நாடாளுமன்ற துளிகள் : மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் - மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அறிவிப்பு

செய்திப்பிரிவு

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நேற்று அமைச்சர்கள் பல்வேறு கேள்விகளுக்கு நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:

ஆயுர்வேத விளம்பரங்கள் கண்காணிப்பு

ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக்: பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகும் ஆயுர்வேத மருந்துகள் சார்ந்த தவறான விளம்பரங்களைக் கண்காணித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வரும்படி இந்திய விளம்பர தரநிர்ணய கவுன்சிலுடன் ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

அதன்படி அரசின் கவனத்துக்கு வரும் தவறான விளம்பரங்கள் மற்றும் அதன் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்து பொருட்களைத் தயாரித்து சோதனை நடத்துவதற்காக மாநிலங்களில் உள்ள 46 மருந்து கடைகளுக்கும், 27 மருந்து சோதனை ஆய்வு கூடங்களுக்கும் மற்றும் மாநில மருந்து உரிமம் வழங்கும் ஆணையங்களுக்கும் தேவையான நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்கள்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா: நாடு முழுவதும் சுகாதார துறையை மேம்படுத்த எண்ணற்ற நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் ஒருபடியாக மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 5,000 பட்ட மேற்படிப்பு இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2017-18 பட்ஜெட்டில் சுகாதார துறைக்காக 27.7 சதவீத நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT