இந்தியா

இந்திய கடல் எல்லையில் நுழைய சீன போர்க் கப்பல்களுக்கு தடை

செய்திப்பிரிவு

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேட இந்திய கடல் எல்லைக்குள் 4 போர்க் கப்பல்களை அனுப்ப மத்திய அரசிடம் சீனா அனுமதி கேட்டது.ஆனால் இந்திய ராணுவத்தின் கடுமையான எதிர்ப்பு காரணமாக சீன போர்க் கப்பல்களை அனுமதிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

சீனா குறிப்பிடும் அந்தப் பகுதியில் இந்திய விமானப் படையும் கடற்படையும் ஏற்கெனவே முழுமையாக தேடுதல் பணி மேற்கொண்டுவிட்டது என்று சீனாவுக்கு அளித்துள்ள பதிலில் மத்திய அரசு கூறியுள்ளது.

SCROLL FOR NEXT