உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங் களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. வரும் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது. அங்கு மிர்ஸாபூர் நகரில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
உத்தரப் பிரதேச இளைஞர்கள் வேலை தேடி குஜராத், மகாராஷ் டிரா மாநிலங்களுக்கு இடம்பெயர் கின்றனர். இதற்கு சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சிகளே காரணம். இரு கட்சிகளின் ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது.
முன்னாள் முதல்வர் முலாயம் சிங், பாட்லி, மிர்ஸாபூரில் 2 பாலங் கள் கட்டப்படும் என்று உறுதி அளித்தார். தந்தை அளித்த வாக் குறுதியை அவரது மகன் அகிலேஷ் யாதவ் காப்பாற்றவில்லை. இதுதான் சமாஜ்வாதி ஆட்சி.
மாநிலத்தில் மின் பற்றாக்குறை நிலவுகிறது என்பதை அண்மையில் சுட்டிக் காட்டினேன். இதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் அகிலேஷ் யாதவ், மின் வயர்களை தொட்டுப் பார்க்குமாறு கூறியுள்ளார்.
இந்த தேர்தலில் சமாஜ்வாதி யுடன் காங்கிரஸ் கைகோத்துள்ளது. அந்த கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி முன்னர் கூறியபோது, உத்தரப் பிரதேசத்தில் மின் வயர்கள் உள்ளன, ஆனால் மின்சாரம் இல்லை என்று தெரிவித்தார். அதை இப்போது அகிலேஷுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
வரும் மார்ச் 11-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். அப்போது சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளுக்கு பயங்கர மின்சார ஷாக் அடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.