இந்தியா

நட்சத்திர விடுதியில் கபாலி படத்தை திரையிட தடை

இரா.வினோத்

கபாலி திரைப்படத்தை லஹரி மியூசிக் நிறுவனம் பெங்களூருவில் உள்ள ராயல் ஆர்ச்சிட், லலித் அசோக் உள்ளிட்ட ஐந்து நட்சத்திர விடுதிகளில் திரையிட திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் கர்நாடக வர்த்தக சபையும், கர்நாடக திரைப்பட விநி யோகஸ்தர் சங்கமும், “திரைப் படத்தை திரையரங்கு அல்லாத விடுதிகள், வெளிஅரங்குகளில் திரையிடுவது சட்டத்துக்கு எதிரா னது. எனவே கபாலி திரையிடுவதை தடுக்க வேண்டும்''என உள்துறை செயலர், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கும் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து பெங்களூரு மாவட்ட ஆட்சியர் சங்கர், நட்சத்திர விடுதிகளில் கபாலி படத்தைத் திரையிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் நட்சத்திர‌ விடுதிகளில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், டிக்கெட் பணத்தை திருப்பித் தருமாறு கோரியுள்ளனர். இதற்கு லஹரி மியூசிக் நிறுவனம் ‘டிக்கெட் பணம் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்பட மாட்டாது என டிக்கெட்டிலே குறிப்பிட்டுள்ளோம். எனவே டிக்கெட் பணத்தை திருப்பி தர முடியாது’ என தெரிவித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பணத்தை இழந்துள்ளனர்

நண்பர் ராஜ்பகதூர் நம்பிக்கை

பெங்களூருவில் ரஜினி பஸ் கண்டக்டராக இருந்தபோது, அந்த பஸ்ஸில் ஓட்டுநராக பணிபுரிந்தவர் ராஜ்பகதூர். இவர்களின் நட்பு இன்றும் தொடர்கிறது.

பெங்களூரு ஹனுமந்த் நகரில் வசிக்கிறார் ராஜ்பகதூர். கபாலி திரைப்படம் குறித்து ராஜ்பகதூர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கபாலி படப் பேச்சு தொடங்கிய போது ஒருநாள் காலை ரஜினி போன் செய்து தகவலை சொன்னார். ரொம்ப வருஷத்துக்கு பிறகு மீண்டும் டான் படம் பண்றேன். நல்ல வருமா? என்றார். நிச்சயமா நல்லா வரும் என்றேன். சில மாதங் களுக்கு முன்பு பேசும்போது

“கபாலி படம் ரொம்ப சூப்பரா வந்திருக்கு. நீ படம் பார்த்துட்டு, நேர்மையா உன்னோட கருத்தை சொல்லு''என்றார்.

கடவுளின் ஆசீர்வாதமும் ரசிகர் களின் ஆதரவும் இருப்பதால், கபாலி நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT