கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி கோயில் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அப்போது நள்ளிரவில் கோயில் வளாகத்தில் இரு பிரிவினர் போட்டி போட்டுக் கொண்டு பட்டாசு வெடித்ததில், அருகில் இருந்த பட்டாசு கிடங்கு வெடித்துச் சிதறியது.
இதில் 109 பேர் பலியாயினர். மேலும் 383 பேர் காய மடைந்தனர். இந்த பட்டாசு வெடிக் கும் போட்டிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி வழங்க வில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக, கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 15 பேர், பட்டாசு ஒப்பந்ததாரர் மற்றும் அவரது பணியாளர்கள் என 41 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 304-வது (மரணம் விளைவிக்கும் குற்றம்) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றம்சாட்டப் பட்டவரகள் சார்பில் உயர் நீதி மன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.உபைத், 41 பேருக்கும் ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார். அதேநேரம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஸ் போர்ட்டை போலீஸில் ஒப்படைக்க வேண்டும் என்றும் வெளிநாடு களுக்கு செல்லக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் நடந்து 91 நாட் கள் ஆகியும் போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வில்லை எனக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. வழக்கு பதிவு செய்த 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப் பிடத்தக்கது.