கோவா தலைநகர் பனாஜியில் உள்ள கன்கோனா நகரில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
கட்டடத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 40 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிற்பகல் மணியளவில் சம்பவம் நடந்துள்ளது. எத்தனை பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்பது சரியாக தெரியவில்லை என்றார்.
சம்பவ இடத்தில் இருந்து 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.