மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடை பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 15வது மக்களவையின் கடைசி கூட்டம் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. முதல் 2 வாரங்கள் நடைபெறும் இக்கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் நிறைவேற்றப்பட உள்ளது.
இதுகுறித்து கமல்நாத் கூறுகையில், “இடைக்கால பட்ஜெட், இடைக்கால ரயில்வே பட்ஜெட் ஆகியவற்றுடன் இந்த மசோதாக்களும் எடுத்துக் கொள்ளப்படும். வரும் தேர்தலை முன்னிட்டு இவற்றை நாங்கள் நிறைவேற்ற முயலுவதாக கூறுவது தவறு” என்றார்.
குளிர்கால கூட்டத்தொடர் முடிவுற்றதாக அறிவிக்கப்படாத நிலையில் அதன் தொடர்ச்சியே வரும் கூட்டத் தொடராகும்.இதனிடையே மக்களவை தேர்தல் ஏப்ரல் மே மாதங்களில் 5 கட்டங்களாக நடைபெறலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.