இந்தியா

சென்னை - புது டெல்லி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

செய்திப்பிரிவு

மின்சார கம்பிகள் பழுதானதால் சென்னை-புது டெல்லி இடையிலான ரயில் போக்குவரத்து நேற்று பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை புது டெல்லி இடையேயான ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமகுண்டம் மாவட்டத்தில் உள்ள கரீம்நகர் ரயில் நிலைய அதிகாரிகள் கூறுகையில், கரீம்நகர் ரயில் பாதையில் உள்ள மின் கம்பிகள் உயர் மின் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அறுந்து விழுந்தது. இதனால் இந்த வழித் தடத்தில் மின்சாரம் தடைப்பட்டது.

இதனால் வட இந்திய மற்றும் தென் இந்திய மார்க்கத்தை இணைக்கும் ஜிடி (கிராண்ட் டிரங்க்) ரயில் தடம் முற்றிலும் மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மின் அழுத்தத்தின் போது கோதவர்கனி வழித் தட பணியில் ஈடுப்பட்டிருந்த 5 தொழிலாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.

மின்சார தடைக் காரணமாக ஆந்திரா எக்ஸ்பிரஸ், ஜிடி எக்ஸ்பிரஸ் மற்றும் பிற ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

SCROLL FOR NEXT