சர்வதேச மகளிர் தினத்தை, வித்தியாசமான டூடுள் வெளியிட்டு கூகுள் கவுரவப்படுத்தி உள்ளது.
சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பிரபலமான கூகுள் தேடு இயந்திரம் வித்தியாசமான டூடுள் வெளியிட்டு, மகளிரை கவுரவப்படுத்தி உள்ளது. முக்கிய மான நாட்களில் புகைப்படம் அல் லது வீடியோ காட்சிகளை டூடுளாக வெளியிட்டு கவுரவப்படுத்துவது கூகுளின் வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மகளிர் தினத்தில் பாட்டி தனது பேத்திக்கு கதை சொல்வது போல் ‘ஸ்லைட்ஷோ’ அமைப்பில் கூகுள் டூடுளை வடிவமைத்துள்ளது.
அதில், 8 புகைப்படங்கள் வழியாக கலை முதல் அறிவியல் வரை திறமையுடன் விளங்கிய 13 பெண்கள், சமுதாயத்துக்கு அவர்கள் அளித்த சிறந்த பங் களிப்பு, மற்றவர்களுக்கு ஊக்க சக்தியாக விளங்கியது எடுத்துரைக் கப்பட்டிருந்தன. பைலட், பாடகி, விண்வெளி வீரர், நடன கலைஞர், விஞ்ஞானி, மருத்துவர் என 13 பெண்களைப் பற்றி பாட்டி படக் கதையாக சொல்வது போல் டூடுள் விளங்கியது. இந்தப் படக்கதை பேத்தியை தனது கற்பனை உலகத்துக்கு அழைத்து செல்வது போல் இருந்தது.
ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் என்று கடந்த 1977-ம் ஆண்டு ஐ.நா. அறிவித்தது. அதில் இருந்து பெண்கள் உரிமை, அமைதிக்காக மகளிர் தினம் கொண் டாடப்பட்டு வருகிறது.