இந்தியா

பிரதமர் கூட்டத்தில் செல்போனுக்கு தடை

பிடிஐ

முக்கிய அலுவல் தொடர்பான விவாதங்களின்போது அதிகாரிகள் சிலர் சமூக வலைதளங்களைக் காண்பதால், தனது கூட்டங்களில் செல்போன்கள் எடுத்து வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தடை விதித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த குடிமை பணிகள் தின நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘மாவட்ட நிலையிலான அதிகாரிகள் இப்பொழுதெல்லாம் மிக மும்முரமாக இருக்கின்றனர். அந்த மும்முரம் வேலையில் இல்லை. சமூக வலைதளங் களைப் பார்ப்பதில் இருக்கிறது. எனவே எனது கூட்டத்தின் போது அதிகாரிகள் செல் போன்களை எடுத்து வரக் கூடாது’’ என்றார்ர்.

மேலும் அவர் மக்கள் நலனுக்காக சமூக வலைதளங் களைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, சுய பயன்பாட்டுக்காக அல்ல என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT