இந்தியா

பசு கடத்தலை தடுக்க நடவடிக்கை: உத்தரபிரதேசத்தில் பசுவதை கூடங்களுக்கு தடை - செயல்திட்டம் வகுக்க போலீஸுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

செய்திப்பிரிவு

உத்தரபிரதேச மாநிலத்தில் பசு வதை கூடங்களை மூடுவதற்கான செயல் திட்டத்தை வகுக்கும்படி போலீஸ் துறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் உ.பி.யில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு பசுக்கள் கடத்துவதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றார். இந்நிலையில், தேர்தல் அறிக்கை யில் பாஜக அளித்த உறுதிமொழி களை ஒவ்வொன்றாக நிறைவேற் றும் நடவடிக்கையில் முதல்வர் ஆதித்யநாத் ஈடுபட்டுள்ளார்.

‘‘பசுக்கள் வெளி மாநிலங் களுக்கு கடத்தப்படுவதால் உ.பி.யில் பால் சார்ந்த தொழில்கள் முன் னேற்றம் காணவில்லை. எனவே, பசு கடத்தல் தடுக்கப்படும். சட்ட விரோத பசுவதைக் கூடங்கள் மூடப்படும்’’ என்று பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் பசுவதை கூடங்களை மூடுவதற்கு செயல் திட்டத்தை அளிக்கும்படி போலீஸ் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உத்தரபிரதேசத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படி யும் அவர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், எந்த வகையான பசுவதை கூடங்கள் மூடப்படும் என்பது குறித்து அதிகாரிகள் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

இதற்கிடையில், சமூக அந்தஸ் துக்காக போலீஸ் பாதுகாப்பைப் பயன்படுத்துபவர்களுக்கும் முதல்வர் ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட வருக்கு இருக்கும் அச்சுறுத்தலின் தன்மை குறித்து மறு ஆய்வு செய்யப்படும். அதன்பின் போலீஸ் பாதுகாப்பு குறித்து முடிவெடுக்கப் படும் என்று ஆதித்யநாத் கூறியுள்ளார். இதனால் உ.பி.யில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பான் மசாலாவுக்கு தடை

உ.பி. முதல்வராக பொறுப் பேற்ற யோகி ஆதித்யநாத் லக்னோவில் உள்ள தலைமை செயலகத்துக்கு (லால் பகதூர் சாஸ்திரி பவன்) நேற்று முதல் முறையாக வந்தார். அங்கு முதல்வர் அலுவலகம், தலைமை செயலர், முதன்மை செயலர், ஐஏஎஸ் அதிகாரிகளின் அலுவலகங்கள் உள்ளன. தலைமை செயலகத்தின் எல்லா தளங்களுக்கும் முதல்வர் ஆதித்யநாத் சென்று அதிகாரி களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தலைமை செயலகத்தின் சில இடங்களில் பான் மசாலா, வெற்றிலை போட்டு எச்சில் துப்பிய கறைகள் இருந்ததை முதல்வர் பார்த்து அதிருப்தி அடைந்தார். பின் னர் அவர் கூறும்போது, ‘‘பணியின் போது அரசு ஊழியர்கள் பான் மசாலா, வெற்றிலை போன்ற புகை யிலைப் பொருட்களை பயன் படுத்தக் கூடாது. அலுவலகங் களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

அரசு அலுவலகங்களில் பிளாஸ் டிக் பயன்படுத்தக் கூடாது, அரசு மருத்துவமனைகள், பள்ளி, கல் லூரிகளில் பான் மசாலா பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து முதல் வர் உத்தரவிட்டுள்ளார். ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அரசு ஊழியர் கள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். மேலும், அலுவலகங் களில் பான் மசாலா பயன்படுத்த மாட்டேன். மற்றவர்களையும் பயன் படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவும் முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இத்தகவலை முதல்வருடன் சென்ற துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT