இந்தியா

சமூக, கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு தேசிய ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிடிஐ

சமூகம் மற்றும் கல்வியில் பின் தங்கியுள்ள பிற்படுத்தப்பட் டோருக்காக தேசிய ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் சமூக ரீதியாகவும், கல்வி அளவிலும் பின்தங்கி யுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு தேசிய ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தேசிய ஆணையம் அமைப் பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த ஆணையத்துக்கு சட்டப் பூர்வ அந்தஸ்து வழங்கும் வகையில் நாடாளுமன்றத்தில் விரைவில் மசோதா அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இந்த தேசிய ஆணையத்தில், தலைவர், துணைத் தலைவர் மற்றும் 3 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்.

மேலும், ‘பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணைய சட்டம் - 1993’ஐ நீக்கவும், இந்தச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையத்தையும் ரத்து செய்யவும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்துக்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT