இந்தியா

மக்களவை நடவடிக்கைகளை பார்வையிட வந்த பிரதமரின் மனைவி

செய்திப்பிரிவு

15-வது நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடரின் கடைசி நாள் இன்று. இன்றைய அவை நடவடிக்கைகளை காண பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுர் மக்களவைக்கு வந்தார். அவருடன் மேலும் சில பார்வையாளர்களும் வந்திருந்தனர்.

30 நிமிடங்கள் வரை பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்து மக்களவை நடவடிக்கைகளை குர்சரண் கவுர் பார்வையிட்டார். ஆனால் அப்போது பிரதமர் அவையில் இல்லை.

கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், இன்று தான் மக்களவையில் அமளி ஏதும் இல்லாமல் இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT