இந்தியா

ஊழல்வாதிகள் தோற்பது உறுதி: அரவிந்த் கேஜ்ரிவால் பேட்டி

செய்திப்பிரிவு

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவு தொடங்கியவுடன், நிர்மல் பவன் வாக்குச்சாவடியில் முதல் நபராக வாக்களித்தார் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி.

70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு இத் தேர்தலில் 810 பேர் போட்டியிடு கின்றனர். பாஜக 66 தொகுதிகளில் போட்டி யிடுகிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் 70 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. பகுஜன் சமாஜ் கட்சி 69 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 27 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 224 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.

காலை 8.10 மணியளவில் ஹனுமன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால். பின்னர் நிருபர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஊழல்வாதிகளை தூக்கி எறிய டெல்லி மக்கள் தயாராகிவிட்டதாகக் கூறினார்.

பாஜக நம்பிக்கை:

கிருஷ்ணா நகர் வாக்குச்சாவடியில் குடும்பதாருடன் வாக்களிக்க வந்திருந்த பாஜக முதல்வர் வேட்பாளர் ஹர்ஷவர்தன், தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது நிச்சயம். ஆம் ஆத்மி கட்சி பாஜக-வுக்கு போட்டியில்லை. 80% வரை வாக்குகள் பதிவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT