இந்தியா

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுமி: மீட்புப் பணி தீவிரம்

செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் நேற்று தவறி விழுந்த 4 வயது சிறுமியை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஹைதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டம், மஞ்சாலா பகுதியைச் சேர்ந்த கிரிஜா (4) நேற்று காலை 11.30 மணியளவில் தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது பஞ்சாயத்து துறை சார்பில் தோண்டிய மூடப்படாத 300 அடி ஆழ்துளை கிணற்றில் அந்த சிறுமி தவறி விழுந்து விட்டாள்.

இதைப் பார்த்த அப்பகுதியினர் உடனடியாக கயிறு மூலம் சிறுமியை மீட்க முயற்சித்தனர். ஆனால் அதற் குள் சிறுமி 40 அடிக்கும் கீழ் சென்று விட்டதால் இதுகுறித்து மஞ்சாலா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார், தீயணைப்பு படையினர் 4 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதல்கட்டமாக ஆக்ஸிஜனை ஆழ்துளை கிணறு வழியாக அனுப்பினர். பின்னர் ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரும் பள்ளத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT