குற்றவாளிகள் அரசியலில் நுழைவதைத் தடுப்பதற்கான பரிந்துரையை உருவாக்கும் பணியில் அரசு ஈடுபட்டுவருவதாக மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று புது தில்லியில் பெண் பத்திரிகையாளர் அமைப்பினருடன் கலந்துரையாம்போது “அரசியலில் குற்றவாளிகள் நுழைவதைத் தடுப்பதற்கான சட்ட முறைகள் தொடர்பாக, காங்கிரஸ் கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் கட்சி தீவிரம் காட்டிவருகிறது.
அரசியலில் குற்றவாளிகள் நுழைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கடுமையான குற்றங்களைச் செய்தவர்கள் அரசியலில் நுழைவதைத் தடுத்தாக வேண்டியது அவசியம்” என்றார் மத்திய அமைச்சர் கபில் சிபல்.