இந்தியா

மோடியிடம் பொருளாதாரப் பாடம் கற்க வேண்டும்- சிதம்பரம்

செய்திப்பிரிவு

பண வீக்கத்தை கட்டுப்படுத்த தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என நான் கூறவில்லை என மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் விளக்கமளித்துள்ளார். பணவீக்கம் குறித்து பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் விமர்சனத்துக்கு பதில் அளித்து ப.சிதம்பரம் இன்று ஒரு அறிக்கை வெளியட்டார்.

அதில்: "நடப்புக்கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவே பொது மக்கள் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று கூறியிருந்தேன் அதனை நரேந்திர மோடி தவறாக புரிந்து கொண்டுள்ளார். முதலில் மோடி வரலாற்றுப் பாடம் எடுத்தார், இப்போது பொருளாதாரப் பாடம் எடுக்கிறார்" என குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நிபுணர்கள் அனைவரும், மோடியின் புதிய பொருளாதாரப் பாடம் பற்றி குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஜோத்பூரில் பிரச்சாரத்தில் பேசிய பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தவே தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று தெரிவித்ததாக கூறியிருந்தார்.

இதற்கு முன்னர் பல்வேறு பொதுக் கூட்டங்களிலும் மோடி தவறான தகவல்களை தெரிவித்திருப்பதாக சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT