ஆந்திர மாநிலத்துக்கு 14-வது திட்டக் கமிஷன் அறிக்கையின் பேரில் சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது என, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு நிதி உதவி செய்ய பெரிதும் ஆதரவாக இருந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுக்கு விஜயவாடாவில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு வெங்கய்ய நாயுடு பேசியது: ஆந்திர மாநில பிரிவினைக்கு அனைத்து கட்சிகளும் ஒப்புக்கொண்டதால் தான் தெலங்கானா மாநிலம் தனியாக பிரிக் கப்பட்டது. ஆனால் இந்த பிரிவினையை காங்கிரஸ் அரசு சரிவர செய்யாத காரணத்தினால்தான் தற்போது ஆந்திரா பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சிறப்பு நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் சிறப்பு அந்தஸ்து அளிக்க இயலாத சூழ்நிலை உள்ளது. இதற்கு 14-வது நிதிக் கமிஷன் ஒப்புகொள்ளவில்லை. ஆயினும் மற்ற 11 சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களுக்கு சமமாக நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
வியாபாரம், அரசியல், சினிமா துறை போன்றவையெல்லாம் முந்தைய காலகட்டத் தில் விஜயவாடாவில்தான் செயல்பட்டு வந்தன. அதன் பின்னர்தான் அவை ஹைதரா பாத்துக்கு மாற்றப்பட்டன. 2009-ம் ஆண்டே ஆந்திர மாநிலம் சரிவர பிரிக்கப்பட்டிருந் தால், இப்பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருந்திருக்காது. இதற்கு அப்போதைய ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியும், காங்கிரஸ் எம்பிக்களுமே காரணம். இவர்கள் அப்போது ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்திருந்தால், மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி வந்திருக்கும். ஆந்திர மாநில பிரிவினையும் சுமூகமாக நடந்திருக்கும். சந்திரபாபு நாயுடுவும் மாநில பிரிவினையை நிறுத்த வேண்டுமென என்னிடம் கூறினார். ஆனால் அதற்குள் நிலைமை அத்துமீறிவிட்டது.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.