இந்தியா

கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ: வீடியோ காட்சியால் மகாராஷ்டிராவில் சர்ச்சை

பிடிஐ

தானே மகாராஷ்டிராவில் கல்லூரி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற மாணவரை அழைத்து தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

மகாராஷ்டிராவின் கல்வா-மும்பரா தொகுதி தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏவான ஜிதேந்திரா அவ்ஹாத்துக்கு தானேவில் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே வசித்து வந்த 19 வயது கல்லூரி மாணவியிடம், சக மாணவர் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவருக்கு பாடம் கற்பிக்கும் வகையில் திங்கட்கிழமை அன்று தனது அலுவலகத்துக்கு அழைத்து வந்த ஜிதேந்திரா, பாதிக்கப்பட்ட மாணவியை வைத்து, மாணவரை தாக்கியுள்ளார். அப்போது உட னிருந்த ஜிதேந்திராவின் ஆதர வாளர்களும் அந்த மாணவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் தண்டிக்கப்பட்ட அந்த மாணவர் மீது, அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அந்த மாணவி புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் அந்த மாணவரை போலீஸார் கைது செய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் மாணவரைக் கண்டித்த வீடியோ காட்சிகளை எம்எல்ஏ ஜிதேந்திரா சமூக வலைத் தளங்களில் பதிவேற்றியுள்ளார். இந்தக் காட்சியை பார்த்தவர்கள், தவறு செய்த மாணவரை அழைத்து ஜிதேந்திரா தண்டித்தா லும், கட்டப் பஞ்சாயத்து மூலம் சட்டத்தை அவர் கையில் எடுத்தது தவறு என கருத்து தெரிவித் துள்ளனர். மேலும் சமூக வலைத் தளங்களிலும் இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வரு கிறது. இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

SCROLL FOR NEXT