இந்தியா

சரத்பவார் ஆட்சிக்கு வந்தால் மகாராஷ்டிராவில் ஊழல் மலிந்துவிடும்: மோடி தாக்கு

செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் மீண்டும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் ஊழல் மலிந்துவிடும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்ப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி சோலாப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடிருந்த பிரதமர் மோடி, "மகாராஷ்டிராவில் மீண்டும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் ஊழல் மலிந்துவிடும்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி இயல்பாகவே ஊழல் மிகுந்த கட்சி. அக்கட்சி உதயமான நாள் முதல் எதுவுமே மாறவில்லை. அக்கட்சியின் சின்னம் கடிகாரம் அதில் கடிகார முள் 10.10 மணியை காட்டும். அதற்கு அர்த்தம், 'கடந்த 10 ஆண்டுகளில் கட்சியின் ஊழல் நடவடிக்கைகள் 10 மடங்கு அதிகரித்துள்ளது' என்பதேயாகும்.

இப்படி இருக்கும் போது தேர்தலில் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பளித்தால், ஊழல் 15 மடங்கு அதிகரிக்கும்.

2014-ம் ஆண்டு, மகாராஷ்டிரா அரசியலில் இருந்து தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் தூக்கி எறியப்பட்டதற்காக நினைவு கூரப்படும்.

காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து மாநிலத்தை சீரழித்துவிட்டன. எனவே தேர்தலில் இக்கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

மக்களை தங்கள் வசப்படுத்தி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுவிடலாம் என அக்கூட்டணி கனவு காண்கிறது. அதை மக்கள் சக்திதான் உடைக்க வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT