இந்தியா

கர்நாடகாவின் கறுப்புத் திங்கள்: பதியத்தக்க 15 தகவல்கள்

செய்திப்பிரிவு

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையில் கர்நாடகாவில் திங்கள்கிழமை மீண்டும் வன்முறை வெடித்தது. அங்கு நிகழ்த்தப்பட்டவை, அதன் எதிரொலியாக அரசுகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை அடங்கிய செய்திகளின் தொகுப்பு இது...

* தமிழகத்துக்கு வரும் 20-ம் தேதி வரை காவிரியில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று (திங்கள்கிழமை) புதிய உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, வன்முறை வெடித்ததால் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக பதிவெண் கொண்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர். கர்நாடகாவில் பாதுகாப்புப் பணிக்கு கூடுதலாக ராணுவப் படையை அனுப்ப வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். | முழு விவரம் >>காவிரியில் தமிழகத்துக்கு செப்.20 வரை 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு: பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமல் | 200 தமிழக வாகனங்கள் எரிப்பு; துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம்; ராணுவ உதவி கோருகிறார் சித்தராமையா

* வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக, பெங்களூருவில் உள்ள ஹெங்கனஹள்ளி பகுதியில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். | முழு விவரம் >>கர்நாடகாவில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

* பெங்களூருவில் வரலாறு காணாத வன்முறை திங்கள்கிழமை வெடித்தது. பேருந்து, லாரி, கார், வேன் என 200-க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்கள் பெங்களூரு சாலைகள் தீப்பிழம்பாக காட்சியளிக்கின்றன. கர்நாடகாவில் தமிழர்கள் மீது பெரிய அளவில் வன்முறை நிகழ்த்த கன்னட அமைப்புகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் 20 ஆயிரம் ஊர்க்காவல் படையினரும் கர்நாடக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். |முழு விவரம் >>போர்க்களமான பெங்களூரு: துணை ராணுவம் வரவழைப்பு

* கன்னட கூட்டமைப்புகளின் சார்பாக கர்நாடகாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. | முழு விவரம் >>தமிழகத்தைக் கண்டித்து மீண்டும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

* கர்நாடகாவில் தொடர் வன்முறை காரணமாக இரு மாநிலங்களிடையே மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநில எல்லையான ஜூஜூவாடி, கக்கன்புரம், டிவிஎஸ், அந்திவாடி உள்ளிட்ட வழித்தடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.அவ்வழியே தமிழக பதிவெண் கொண்ட இரு சக்கர வாகனங்கள், கார், லாரி, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் கர்நாடகாவுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. | முழு விவரம் >>தமிழக பதிவெண் உள்ள வாகனங்களுக்கு தடை

* கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். | முழு விவரம் >>கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களை பாதுகாக்க வேண்டும்: கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவுக்கு ஜெயலலிதா கடிதம்

* காவிரி விவகாரத்தில் கர்நாடகா, தமிழகம் ஆகிய இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார். | முழு விவரம் >>இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும்: கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள்

* கர்நாடகாவில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், இதுவரை ரூ.100 கோடி ரூபாய் சேதம் அடைந்துள்ளது. இயல்பு நிலை திரும்பும் வரை கர்நாடகா மாநிலத்துக்கு லாரிகள் இயக்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தமிழ்நாடு மாநிலத் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். | முழு விவரம் >>கர்நாடக மாநிலத்தில் பதற்றம்: தற்காலிகமாக தமிழக லாரிகள் நிறுத்தம் - லாரி உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் தகவல்

* வன்முறையின் எதிரொலியாக, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு பேருந்து சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டது. | முழு விவரம் >>வன்முறை வெடித்ததால் கர்நாடகாவுக்கு பஸ் சேவை முழுவதுமாக நிறுத்தம்

* கர்நாடகாவில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அந்த மாநில அரசுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி யுள்ளதாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். | முழு விவரம் >>கர்நாடக தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் விளக்கம்

* கர்நாடகாவில் நடைபெற்று வரும் கலவரங்களின் எதிரொலியாக சென்னையில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடாமல் தடுக்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் வீடு மற்றும் கன்னட மக்களின் சொத்துகளுக்கு போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். | முழு விவரம் >>நடிகர் ரஜினிகாந்த் வீடு, கர்நாடக நிறுவனங்களுக்கு பாதுகாப்பு

* சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ‘நியூ உட்லண்ட்ஸ்’ நட்சத்திர ஹோட்டல் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். பைக், ஆட்டோவில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு களை வீசினர். கல்வீசியும் தாக்கினர். |முழு விவரம் >>நட்சத்திர ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: சென்னையில் 4 பேர் கைது

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 20-ம் தேதி ரயில் மறியல் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன் மறியல் போராட்டங்கள் நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். |முழு விவரம் >>டெல்டா மாவட்டங்களில் செப். 20-ல் ரயில் மறியல்: விவசாயிகள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் அறிவிப்பு

* இதனிடையே, டெல்லியில் நடந்த காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவில்லை என தக‌வல்கள் வெளியாகியுள்ளன. | முழு விவரம் >>காவிரி மேற்பார்வை கூட்டத்தில் முடிவுகள் எட்டப்படவில்லை

SCROLL FOR NEXT