இந்தியா

பாஜக மீது ஷர்மிளா புகார்: விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை

செய்திப்பிரிவு

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறக் கோரி சுமார் 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளா கடந்த ஆகஸ்ட் மாதம் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். இரும்புப் பெண் மணி என அழைக்கப்படும் இவர் புதிய கட்சியும் தொடங்கியுள்ளார்.

தற்போது தேர்தலை எதிர்கொண்டுள்ள மணிப்பூரில் தவுபால், குராய் ஆகிய 2 தொகுதிகளில் ஷர்மிளா போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

இந்நிலையில் தவுபால் தொகுதியில் மாநில முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட அக்கட்சி ரூ.36 கோடி கொடுக்க முன்வந்ததாக கடந்த திங்கள்கிழமை ஷர்மிளா குற்றம் சாட்டினார். ஆனால் ஷர்மிளா கூறும் பெயரில் பாஜகவில் நிர்வாகிகள் யாருமில்லை என பாஜக மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் ஷர்மிளா வின் புகார் குறித்து சுதந்திர மான விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில தேர்தல் ஆணையம் விரைந்து செயல்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் கோரியுள்ளது.

SCROLL FOR NEXT